அ. தங்கம்
உரிமையாளர்
சித்தயோக ஃபார்மா
வேளச்சேரி, சென்னை.


திருமதி. தங்கம் அன்புகணபதி அக்டோபர் மாதம் 15ம் தேதி 1961ஆம் வருடம் நாமக்கல் மாவட்டம் காவரிக்கரையோரத்தில் உள்ள குச்சிப்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தார்.

கல்வி

1 முதல் 5 வரை குச்சிப்பாளையத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் படித்தார் (1966 முதல் 1970 வரை) 6வது வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை பாண்டமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார் (1971 முதல் 1976 வரை) PUC வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் படித்தார். 1977 முதல் 1978 வரை B.Sc., நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை மகளிர் கலைக்கல்லூரில் படித்தார் (1979 முதல் 1981 வரை) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் BAவும், MA Sociology படித்தார்.

அவரின் மருத்துவ சேவையை பாராட்டி Global Human Peace University கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

1981ஆம் ஆண்டு மருத்துவர் அன்புகணபதியிடம் யோகாசனப் பயிற்சியும், தியானமும் கற்றார். 1981ல் மருத்துவர் ச. இராமதாசு அய்யா அவர்கள் தலைமையில் மருத்துவர் கோ. அன்புகணபதியின் இல்வாழ்க்கை துணைவி ஆனார்.

1981 முதல் 1982 வரை மருத்துவர் கோ. அன்புகணபதியின் உண்மைக் கராத்தே பள்ளியில் சேர்ந்து பிரவுன் பெல்ட் வரை பயிற்சி பெற்றார். ஏத்தாப்பூர் ஞான பரஞ்சோதி சுவாமியிடம் தியானம் கற்றார். ஹடயோகி துறையூர் சுந்தரராஜு சுவாமிகளிடம் ஹட யோகப் பயிற்சி பெற்றார். சர்வதேச புகழ்பெற்ற மாங்கீர் யோகப் பாடசாலையின் கிளையான சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள சிவ்தர்ஷன் யோக வித்யாலயாவில் TTC (Teacher Training Certificate Course) யோகா ஆசிரியர் பயிற்சி பெற்றார் (2017 முதல் 2018).

சித்தயோக ஃபார்மா உருவான வரலாறு

இவரின் சிறு வயதில் தாத்தா பாம்பு கடிக்கு மருந்து கொடுப்பார் தாத்தா சொல்லும் பத்தியங்களையும் வேர் கொடுக்கும் பாங்கினையும் வியந்து பார்ப்பார்.

தாத்தாவின் அம்மா பாட்டி மாந்தப்பிடி பிடிப்பார் தினந்தோறும் காலையில் சிறுகுழந்தைகளைக் கூட்டி வருவார்கள் பாட்டி திண்ணையில் அமர்ந்து குழந்தையின் புறங்கையைத் தேய்த்து முகர்ந்து பார்ப்பார் சிலருக்கு மாந்தம் உள்ளது என்பார். சிலருக்கு இல்லை என்பார். மாந்தம் உள்ள குழந்தைகளுக்கு மாந்தப்படி பிடிப்பார் வசம்பை நல்ல விளக்கில் சுட்டு கரியை தேனில் குழைத்து கொடுக்கச் சொல்வார் இரண்டொரு நாளில் மாந்தம் சரியாகி வயிற்றுப்போக்கு சரியாகும்.

அப்பா பெரிய, பெரிய பானைகள் வைத்து இலைகள், வேர்கள், கடை சரக்குகள் சேர்த்து கசாயம் செய்வார்.

1981ல் திருமணத்திற்குப் பின்னர் மருத்துவருக்கு துணையாக மருந்துகள் இடிக்க, அரைக்க, காய்ச்ச என்று வேலைகள் பார்ப்பார். மருத்துவர் ஊரில் இல்லாத சமயம் பிணியாளர்களுக்கு தொடர்ச்சி விட்டுப்போகாமல் இருக்க தொலைபேசியில் மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்டு மருந்து தருவார். மருத்துவரின் தந்தையாருக்கு தாடைப்புற்று உண்டாகி இன்னும் 1 மாதமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறிய நிலையில் தன் தந்தையாருக்கு மருந்து கொடுத்து 9 ஆண்டு காலம் உயிருடனிருந்தார் என்பதால் மாமியார் 9 ஆண்டு காலம் மாங்கல்ய பலம் என் மகனால் கிடைத்தது என அடிக்கடி சொல்வது சித்த மருத்துவத்தின் மகத்துவத்தையும் சித்தர்களின் ஞானத்தைப் புரிந்து கொள்ளவும், சித்த மருத்துவத்தின் மீது ஈடுபாட்டையும் உண்டாக்கியது.

மேலும் மருத்துவரின் ஆராய்ச்சியில் பங்கு கொண்டு கினிபிக், அல்பினோ மெளஸ் போன்ற விலங்குகளுக்கு மருந்துகள் கொடுத்து பரீட்ச்சித்துப் பார்ப்பதிலே உறுதுணையாக இருந்தார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளை இந்தியா மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் மருத்துவர் வெளியிடுவார். இந்த மருந்துகள் வெறும் ஆராய்ச்சி கட்டுரைகளாக இல்லாமல் முறைப்படி உரிமம் எடுத்தால் தான் மக்களுக்குப் பயன்படும். ஆகையால் எனக்கு உரிமம் எடுத்துத்தாருங்கள் என்று கேட்டார். மாமியாரின் ஆசீர்வாதமும், பிணி தீர்ந்த பிணியாளர்களின் ஆசீர்வாதமும் சித்தயோக ஃபார்மா உருவாக காரணமாக அமைந்தது. தன்னுடைய அப்பா கற்றுத்தந்த ‘நிர்வாகத்திறன்’ நிறுவனத்தை லாபகரமாக நடத்த பேருதுதவியாக இருந்தது. மருத்துவர் தேடித்தேடி கற்றுக்கொண்ட மருத்துவ சூத்திரங்கைளயும், மூலிகைகளை அடையாளம் காணவும் தனது துணைவியாருக்கு கற்றுத் தந்தார்.

சித்தயோக ஃபார்மா நிறுவனர் மருத்துவர் கோ. அன்புகணபதி அவர்களால் 19.12.1990ல் பங்கு நிறுவனமாக (partnership) பரமத்திவேலுர், நாமக்கல் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அபாமின், லிவாக் என இரு மருந்துகள் மட்டும் தயாரிப்பில் இருந்தது. ஒரு வருடத்திற்குமேல் வியாபாரம் நடந்தாலும் லாபம் என்று ஏதுமில்லை ரூபாய் 1.75.000 (ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம்) நஷ்டமானது தொடர்ந்து நடத்த முடியாமல் 3 மாதம் மழை பெய்ததாலும் இருந்த மூலப்பொருட்கள் அனைத்தும் பூஞ்ஜை வைத்து வீணாயிற்று 1992ல் நிறுவனத்தை நான் எற்று நடத்துகிறேன் என திருமதி. தங்கம் அன்புகணபதி பொறுப்பேற்றுக் கொண்டார் பங்கு நிறுவனமாக இருந்த நிறுவனம் தனியார் நிறுவனமாக 1992ல் மாறியது.

புஷ்டி, வல்லாரை டானிக், கைனமின், காஃபமின் போன்ற டானிக் வகைகளும் 1996ல் கேப்ஸ்யூல், எண்ணெய் வகைகள் என மொத்தம் 36 மருந்துகளுக்கு உரிமம் எடுக்கப்பட்டது. 1996, 1997, 1998 ஜூன் வரை தமிழகத்தில் 400 பள்ளிகளில் சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

2000ல்
400 மூலிகைக் கண்காட்சி திறப்பு விழா
புதிய மருந்துகள் அறிமுக விழா
புதிய விற்பனை ஸ்கீம்
ஆகிய முப்பெரும் விழாவை மருத்துவர் ச. இராமதாசு ஐயா சிறப்பாக நடத்தித் தந்தார் 2001ல் பிரபாஸ் வீ கேர் நிறுவனம் சித்தயோக ஃபார்மாவுடன் விற்பனை பிரிவில் இணைந்தது இன்று வரை அவர்களுடனான விற்பனை தொடர்கிறது. 2005ல் சித்தயோக ஃபார்மா சென்னை வேளச்சேரிக்கு மாற்றப்பட்டது 2010ல் எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்கள் துக்ளக் பத்திரிகையில் மருத்துவர் பற்றி எழுதிய செய்தி இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. 2011ல் எழுத்தாளர் சாருநிவேதிதா ‘சுகம் கிளினிக்கை’ வேளச்சேரியில் திறந்து வைத்தார்.

மக்கள் தொலைக்காட்சியில் ‘நலம் தரும் மூலிகை’ என்ற காலை வணக்கம் நிகழ்ச்சியில் காலை 7.50 முதல் 8.00 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை சித்த மருத்துவம் பற்றி எடுத்துரைக்க மருத்துவர் சா. இராமதாசு ஐயா அவர்களும் திருமதி. செளமிய அன்புமணி அவர்களும், சின்ன ஐயா அவர்களும் கொடுத்த ஊக்கத்தினால் சித்த மருத்துவம் உலகம் முழுவதும் தெரிவதற்கு வாய்ப்பாக அமைந்தது. 2013 மலேசியாவில் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. இராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதல் பேரில் யோகப் பயிற்சி கிளேங், ஈப்போ, பினாங்கு, கோலாலம்பூர் போன்ற இடங்களில் நடத்தப்பட்டது.

2016ல் ஜூலை 1ல் (Fetna) அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் பேரவையின் தலைவர் திரு, பார்த்தசாரதி மற்றும் பேராசியர் செந்தமிழ்ச்செல்வன் மருத்துவரை அழைத்திருந்தார். சித்த மருத்துவம் பற்றி 108 எபிசோடுகள் ‘வலைத்தமிழ்’ என்ற யூடியூப் (You Tube) சேனல் மூலம் வெளியிட்டார்கள்.

24.11.2018ல் சித்தயோக ஃபார்மாவின் வெள்ளிவிழா கொண்டாட்பட்டது மருத்துவர் ச. இராமதாசு ஐயா அவர்கள் தலைமையில் G.K. மணி அவர்கள் முன்னிலையில் சித்த மருத்துவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், மருத்துவர் கு. சிவராமன், மருத்துவர் செல்வ ஷண்முகம், மருத்துவர் உசைன்பாய், பாரதியார் பேரன் குஞ்சரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தார்கள். பணியாளர்களுக்கு மற்றும் அனைத்து மாவட்ட முகவர்களுக்கும் அரை பவுன் தங்க காசும், விருதுகளும் மருத்துவர் ஐயா அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

44 சாஸ்திரிக் சித்த மருந்துகளுக்கு உரிமம் எடுக்கப்பட்டது மொத்தம் 86 சித்த மருந்துகள் தற்போது தயாரிப்பில் உள்ளது.

நடிகர் திரு. ராஜேஸ் அவர்கள் மருத்துவருடனான நட்பின் அடையாளமாக ஓம் சரவணபவா யூடியூப் (You Tube) சேனல் மூலமாக மருத்துவரைப் பேட்டி கண்டு சித்த மருத்துவத்திற்கு மேலும் பெருமை சேர்த்தார்.

அன்பு மருத்துவமனை வேளச்சேரியில் மருத்துவர் கோ. அன்புகணபதி, மருத்துவர் செல்வகம்பீர், மருத்துவர் காவியா அனைவரும் இணைந்து ஒருங்கிைணந்த கூட்டு முயற்சியாக சித்த மருத்துவமும், அலோபதி மருத்துவமும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்துள்ளனர். மருத்துவர் செல்வகம்பீரும், மருத்துவர் காவியாவும் சிறு வயது முதல் மருந்துகள் தயாரிப்பில் கலந்து கொண்டதாலும், தந்தையுடன் கூடவே இருந்ததாலும் சித்த மருத்துவத்திலும் சிறந்து விளங்குகிறார்கள்.

தரமான மூலப்பொருட்களைக் கொண்டு (கொல்லிமலை, ஏற்காடு மலை, குற்றாளம், விழுப்புரத்திலுள்ள சொந்த பண்ணையில் இருந்து மூலிகைகளை தருவிப்பதால்) சித்தர்கள் கூறிய சுத்தி முறையுடன், நவீன அறிவியல் முறையும் பின்பற்றி முழுதரக்கட்டுப் பாட்டுடன் தாயரிக்கப்படுவதால் மருத்துவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

தொற்றிப் பரவாத (Non Comunicable) வாழ்க்கை முறை சார்ந்த (Life Style Oriented) நோய்களுக்கு நிரந்தர தீர்வு அளிக்க கூடிய மருந்துகளை சித்தயோக ஃபார்மா நிறுவனத்தின் மூலமாக மக்களுக்கு அளிக்கிற ஒரு வாய்ப்பு எனக்கு இறைவன் தந்த வரமாக நான் கருதுகிறேன்.

மூலிகையின் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தில் இணைக்கப்பட்டுள்ள பரிசோதனைக் கூடத்தில் முறையாக பரிசோதனை செய்யப்படுகிறது. முடிந்த மருந்துகளில் மூலிகையின் மூலக்கூறுகள் சரியான அளவில் இருக்கின்றனவா என்பதும் ஆய்வுக்கூடத்தில் கண்டறியப்படுகிறது. இதன் மூலம் தரமான மருந்து மக்களுக்கு கிடைக்கிறது.

முனைவர் பட்டம் பெற்ற பரிசோதனையாளர்களையும் (Lab Analyst) நிறைந்த அனுபவம் பெற்ற அரசு மற்றும் கூட்டுறவு மருந்து நிறுவனங்களில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற தேர்ந்த பணியாளர்களின் உதவியைக் கொண்டு மருந்துகளெல்லாம் தயரிக்கப் படுகின்றன.

தன்னுடைய ஆராய்ச்சியினாலும், அனுபவத்தினாலும் பாரம்பரிய தொடர்பினாலும் கண்டுபிடித்த, தோற்காத கண்டிப்பாக பலன் தருகின்ற உயர்ந்த மருந்துகளை தேரையரும், அகத்தியரும் புலிப்பாணியும், போகரும் சொன்ன வழிமுறைகளையெல்லாம் கையாண்டு நவீன அறிவியல் ஆராய்ச்சியினால் நிரூபித்து எனது கணவர் முனைவர் கோ. அன்புகணபதி M.Sc., Ph.D., E.S.M.P. அவர்கள் உருவாக்கிய மருத்துகளையெல்லாம் தயாரிக்கிற நிறுவனமான சித்தயோக ஃபார்மாவை பொறுப்பேற்று நடத்துவது மனதிற்கு ஆத்ம திருப்பதி அளிக்கிறது.

சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure) கல்லீரல் செயலிழப்பு (Liver Failure) நுரையீரல் செயலிழப்பு Intertial (Lung Disese ILD) மூட்டுகள் செயலிழப்பு (Rheumatiod Arthritis) இருதய நோய்கள் (Heart Disease) மூலம் பெளத்திரம் (Piles & Fistula) காளாஞ்சகப்படை (Psoriasis) ஆஸ்த்துமா (Asthma) ஆட்டிசம் (Autism) கண் பார்வைப்பிழை (Vision Defect & Cataract) கற்பபை பிணிகள் என நீண்டுகொண்டே போகின்ற குணமக்க முடியாது, அறுவை சிகிச்சை ஒன்றே வழி என சொல்லும் நோய்களுக்கு எல்லாம் தீர்வாக இருக்கிற மருத்துகளை தயாரிப்பது சித்தயோக ஃபார்மாவின் தனிச்சிறப்பாகும்.

சென்னை, விழுப்பும், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கரூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், அரூர், நாமக்கல், பெங்களூர் ஆகிய இடங்களில் அமைத்துள்ள கிளைகளின் மூலமாக சித்தயோக ஃபார்மா மருந்துகள் மக்களுக்கு கிடைக்க செய்வது மன நிறைவளிக்கிறது.

மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியினை மருத்துவமும், வாழ்க்கைத் துணை மட்டுமல்லாமல் மருந்துகள் தாயரித்து அளிப்பதிலும் சரிபாதியாக பொறுப்பேற்று நிறுவனத்தை நடத்துவதில் பாக்கியம் பெற்றேன்.

சித்தர்களின் ஆசீர்வாதமும், கடவுளின் ஆசீர்வாதமும், பெற்றோர், பெரிேயார்களின் ஆசீர்வாதமும் கணவரின் ஆசீர்வாதமும், குழந்தைகளின் ஒத்துழைப்பும் சித்தயோக ஃபார்மாவினை திறம்பட நடத்த உறுதுணையாக உள்ளது.